1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Does star fruit increase immunity...?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா நட்சத்திரப்பழம்...?

நோய் எதிர்ப்பு சக்தி
நட்சத்திரப் பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள கசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு  சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலின்றி வாழலாம்.

பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி  தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.
 
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திரப் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.
 
மழைக்காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இப்பழத்தினை உண்ணும்போது சருமானது நீர்ச்சத்துடன் சுருக்கங்கள், பருக்கள் இன்றி பளபளப்பாக இருக்கும்.
 
இப்பழத்தில் உள்ள தாது உப்புக்கள் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி உடலினை பலப்படுத்துகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்டு நல்ல பலனைப் பெறலாம்.
 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு  உண்டு.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வீட்டில் பல்லி தொல்லையை போக்க சில டிப்ஸ் !!