உடல் எடை குறைக்க உதவுகிறதா முலாம்பழம்...?
முலாம்பழத்தில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது. இந்த வைட்டமின் உடல்நலத்திற்கும் குறிப்பாக கண்பார்வைக்கு மிக அவசியமாய் இருக்கிறது.
கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினை தீர்க்கிறது. கண்களை எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கின்றது.
கோடை காலங்களில் முலாம்பழங்களை துண்டாக்கி தண்ணீரில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைத்து அதில் முலாம்பழத் துண்டுகளை ஊற வைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.
அதிக வெப்பத்தினால் உடலில் நீர் வியர்வையாக வெளியேற்றி விடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து இரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் மூலம் பழங்களை சாப்பிட்டால் அல்லது சாற்றை அருந்தினால் இரத்தத்தில் நீர் சத்து அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
சிறுநீர்ப் பைகளில் சிறுநீர் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற செய்கிறது.
உடல் எடை குறைக்க முலாம்பழம் உதவுகிறது. முலாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு கரையக்கூடிய வேதிப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது. காலை மற்றும் மதிய வேளைகளில் முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது சீக்கிரம் குறைய தொடங்கும்.