திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தேங்காய் பால் குடித்து வருவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா...?

எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. 

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
 
ஒரு கப் தேங்காய் பாலில் 89 மி.கி அளவு மெக்னீசியம் உள்ளதால் நரம்புசம்பந்தமான பாதிப்புகளில் இருந்து காக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
 
வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, செலீனியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய உடலுக்கு தேவையான பல சத்துக்கள் தேங்காய் பாலில் இருப்பதால் பசும்பால் பிடிக்காதவர்கள் கூட இந்த தேங்காய் பாலை தினமும் குடிக்கலாம்.
 
இது எலும்புகளின் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தேங்காய் பாலில் உள்ள செலீனியம் ஆர்த்தரைடீஸ் நோயை குணப்படுத்துகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
தேங்காய் பாலில் உள்ள ஒமேகா 3 உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மேலும் தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து காரணமாக, தேங்காய் பால் குடித்த பிறகு வெகுநேரம் பசிப்பதைத் தடுக்கிறது. அதனால் உடல் எடை இயற்கையாகவே குறைய தொடங்கும்.
 
தேங்காய் பால் குடித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு காணலாம். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.