ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified வியாழன், 26 மே 2022 (15:14 IST)

கொண்டைக்கடலையில் எந்த சத்து அதிகம் உள்ளது தெரியுமா...?

Kondai Kadalai
கருப்பு கொண்டைக்கடலை, வெள்ளை கொண்டைக்கடலை என இரண்டு வகைகள் உள்ளன. கொண்டைக் கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளன.


கொண்டைக் கடலையில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் வளமான அளவில் உள்ளதால், இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். கொண்டைக் கடலையை தினமும் வேகவைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடை குறைக்க உதவுகிறது.

கொண்டைக் கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் கொண்டைக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

கொண்டைக் கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து வளமான அளவில் உள்ளதால் இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது.

கொண்டைக் கடலையில் நார்சத்து நிறைந்துள்ளதால் தினமும் இரவில் படுக்கும் போது கொண்டைக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், செரிமான மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.