1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Do you know which lentils are rich in various nutrients...?

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு வகை எது தெரியுமா...?

ஊட்டச்சத்துக்கள்
பாதாம் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. பாதாம் பருப்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன.


பாதாம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. நகங்களில் உண்டாகும் எந்தவொரு காயத்தையும் குணப்படுத்த பாதாம் பயனுள்ளதாக இருக்கிறது.

பாதாம் என்பது, வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அற்புதமான பருப்பு வகையாகும். இதில் அதிகளவில்  ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன, இவை அனைத்தும் உடலை பலப்படுத்தவும், மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகின்றன.

பாதாம் குறைந்த அளவிலேயே கலோரிகளைக் கொண்டுள்ளது, எனினும்  இதனை சரியான அளவிலேயே உட்கொள்ள வேண்டும். மேலும், உடலில் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க  பாதாம் உதவுகிறது.

தினசரி, பாதாம் பருப்பை உட்கொள்வதன் மூலம் உதடுகளை பராமரிக்க முடிகிறது. பூராண் கடித்ததினால் உண்டாகும் தடிப்பு வலிக்கு  பாதாம் எண்ணெய் பயனுள்ளதாக அமைகிறது.

ஊறவைத்த பாதாமின் வெளிப்புற தோலை உரித்து  உட்கொள்வதன் மூலம்  சிறுநீர் கழிக்கும் போது, உண்டாகும் எரிச்சல் உணர்விலிருந்து நிவாரணம் பெற முடிகிறது.

பாதாம் மற்றும் கடுகு எண்ணெய்யின் கலவையைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் கடுமையான தலைவலியிலிருந்து நிவாரணண் பெற பயனுள்ளதாக இருக்கிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய உதவும் குறிப்புகள் !!