வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன விளைவுகள் தெரியுமா...?

ஒருவர் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன விளைவு ஏற்படும் என்றும், எந்த நிலையில் தூங்குவது நல்லது என்று தெரிந்துக்கொள்வோம்.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கருதப்படுகிறது. ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். 
 
குறிப்பாக வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் ஆரோக்கியம் மோசமாவதோடு, செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவை பாழாகும் என நம்பப்படுகிறது. முக்கியமாக பிணங்களை வடக்கு திசையில் தலை வைத்து தான் வைப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள்.
 
ஏன் வடக்கு திசையில் படுக்கக் கூடாது? பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
 
தெற்கு திசை இந்த திசை மிகச்சிறப்பான திசையாக கருதப்படுகிறது. ஒருவர் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
 
கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும். முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
 
மேற்கு திசை மற்றொரு சிறப்பான திசை தான் மேற்கு. இந்த திசையில் தலை வைத்து தூங்கினால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் காணக்கூடும். மேலும் இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே தூங்கும் போது, முதலில் சிறந்த திசையாக கருதப்படுவது கிழக்கு, தெற்கு, பின்பு தான் மேற்கு. வடக்கு திசையில் மட்டும் எக்காரணம் கொண்டும் தலை வைத்து படுக்காதீர்கள்.