1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Do you know what nutrients are in beetroot in abundance...?

பீட்ரூட்டில் என்ன சத்துக்கள் ஏராளமாக உள்ளது தெரியுமா...?

பீட்ரூட்
பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. பீட்ரூட்டில் உள்ள பொருள்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

இதில் பீட்டா சையனின், மற்றும் கரையக்கூடிய நார்ச்சட்த்துகள் அடங்கி உள்ளன. இவை செல்களுக்கு வலுவூட்டவும், இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து நெஞ்சு வலி, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
பீட்ரூட்டில் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இவை கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கிய சத்தாகும். இதை தவிர பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாது.
 
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. மேலும் களைப்பு மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 
இதில் உள்ள சையனின்கள் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி புற்று நோய் வராமல் தடுக்கும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை சரி செய்யும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால் !