1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (13:13 IST)

தக்காளியில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா....?

வைட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, நியாசின் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளன.


அஜீரணம் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு இது சிறந்த நிவாரணமாகும். தேனும், ஏலக்காய்த் தூளும் கலந்து பருகினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

வயிற்று கடுப்பு நோய்க்கு பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றுடன் உட்கொள்ள வேண்டும். மாலைக்கண், கிட்டப்பார்வை கோளாறு ஆகியவற்றை தடுக்க தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ சத்து உதவுகிறது.

தினமும் காலையில் ஒரு தக்காளி சாப்பிட்டுவர சிறுநீர்ப் பாதையில் கல் தோன்றாதவாறு தடுக்கலாம். தக்காளி சிறுநீரில் உள்ள அமிலம் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்று நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது

ஒரு கப் தக்காளி சாற்றில் சிறிதளவு உப்பும், சிறிதளவு மிளகுத்தூளும் கலந்து பருகினால் மஞ்சள் காமாலைக்கு நல்லது. ஒரு டம்ளர் தக்காளி சாற்றுடன் தேனும் ஒரு சிட்டிகை ஏல பொடியும் கலந்து பருக வேண்டும். நுரையீரல் கோளாறுகளில் நிவாரணம் பெற இது உதவும்.

சிறுநீரகப் பையில் ஏற்படும் கல் மற்றும் வயிறு, ஈரல் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் தக்காளி சாருக்கு இருக்கிறது. தக்காளியை அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். அதனுடைய கூழ்பகுதியை முகத்தில் தாராளமாகப் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.