வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (15:37 IST)

பூசணி விதைகளில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா...?

பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.


பூசணி விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்ஸ் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நல்ல தூக்கத்தை தரும்.

பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும்  ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது. இது நீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளில் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது.