திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 19 மே 2022 (11:51 IST)

கிவி பழத்தில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன் தருகிறது தெரியுமா...?

Kiwi Fruit
கிவி பழம் இரத்த உறைதலைத் தடுக்கவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.


இரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

கிவி பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவும். இதற்கு கிவி பழத்தை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. கருவின் வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான சத்தாகும்.

கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கிவிப் பழம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி செய்கிறது.

இதய நோயின் அபாயத்தைத் தடுக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.