வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (10:30 IST)

முருங்கைக்காயை சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா...?

Drumstick
முருங்கைக்காய் நன்மைகள் மற்றும் பயன்களில் முக்கியமானது கண் பார்வையை மேம்படுத்துவது ஆகும். விழித்திரை மீது உள்ள நச்சுகளை நீக்கி விழித்திரை ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.


எலும்பு வளர்ச்சிக்கு உதவும் இயற்கையான சப்ளிமெண்ட்ஸை தேடுபவர்களுக்கு முருங்கை காய் சிறந்த தேர்வாகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.

முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.