புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் தக்காளி சாறு குடிப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ் ,வைட்டமின் சி, கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.  மேலும் இதன் சாறு அமிலத்தன்மை, உடல் பருமன் மற்றும் கண்களின் கடுமையான பிரச்சினையை நீக்குகிறது.

தக்காளி சாற்றை ஒரு நாளைக்கு 2 முறை அருந்துங்கள். ஏனென்றால் கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே சத்துகள் அதிக  அளவில் உள்ளது. மேலும் தினமும் 1 கிளாஸ் தக்காளி சாறு குடிப்பதால் கண்கள் பாதுகாப்பாக இருக்கும்.
 
நன்கு பழுத்த சில தக்காளி பழங்களின் தோல் மற்றும் விதைகளை நீக்கி பழங்களை அரிந்து, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும்,  தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 
உடல் எடையை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்தினால் போதும். ஏனென்றால் தக்காளி சாற்றில் மிகுந்த குறைவான  கலோரிகள் தான் உள்ளது.
 
தக்காளி சாறு அருந்தினால் உடல் மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுப் பொருட்களை போக்கும். மேலும் இது கல்லீரல், பித்தப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க  உதவுகிறது.
 
தக்காளி சாறு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. ஏனென்றால் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் தக்காளி சாறு குடிப்பதால் பதினெட்டு சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என  கூறப்படுகிறது.
 
இதயம் என்பது நமது உடலின் முக்கியமான ஒரு உறுப்பு. இந்த இதயத்தை பாதுக்காக்க இந்த தக்காளி சாறு மிகவும் உதவுகிறது. ஏனென்றால் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் கோலின் ஆகியவை உள்ளன. அவை இதயத்திற்கு ஆரோக்கியதை தருகின்றன. ஆகவே தினமும் ஒரு கிளாஸ் தக்காளி  சாறு குடிப்பது மிகவும் நல்லது.
 
தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைந்து தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும்  உண்டாகும்.