1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வெற்றிலை தீபம் ஏற்றுவதால் என்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா...?

வெற்றிலை காம்பில் பார்வதிதேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம்.


சேதாரமில்லாத புத்தம்புது வெற்றிலையினை 6 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாய் நுனிப்பகுதி சேதாரமில்லாமல் இருக்கக்கூடாது. 
 
நுனியில்லாத வெற்றிலையை பூஜைக்கு எப்போதுமே பயன்படுத்த கூடாது. வெற்றிலையிலிருந்து காம்பினை கிள்ளி எடுத்துக் கொள்ளவேண்டும். காம்பில்லாத 6  வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ 6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும்.  அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு வைக்கவும். அடுத்து கிள்ளி வைத்திருக்கும் 6 காம்புகளையும் நல்லெண்ணெய்க்குள்  போட்டு, தீபத்தை ஏற்ற வேண்டும்.
 
ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் தீபத்தின் சூடுபட்டு, வெற்றிலையிலிருந்து நறுமணம் வீசும். 
 
இந்த நறுமணத்தை நன்றாக உள்ளிழுத்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், விரைவில் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும். நினைத்தது ஈடேறும். காரணம் வெற்றிலையில் வீற்றிருக்கும் முப்பெரும்தேவிகளின் அருட்பார்வை கிட்டும். நம் நிலை மாறும்.