பசலைக்கீரையை உட்கொள்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?
பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு பைட்டோ நியுட்ரியண்ட்டுகள் இருக்கிறது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இந்த கீரையில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவும்.
பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளை பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
பசலைக்கீரையை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள் ஆகும்.
முக அழகையும், சருமத்தில் பளபளப்பைஅயும் கவர்ச்சியான நிறத்தையும் பெற பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
பசலைக் கீரையால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுடன் வெளியேறுதல், வெள்ளை ஒழுக்கு ஆகியவை நீங்கும். பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும்.
பசலைக்கீரை இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுக்கிறது. பசலை கீரையிலுள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாடு ஏற்படமல் தடுக்கிறது.
பசலைகீரையில் அதிகமாக பச்சையம் உள்ளது. இந்த பச்சையமானது உடலில் கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது. பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
பசலை கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் பருமனாவதில் இருந்து தப்பிக்கலாம். மேலும் இது வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.