திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (16:56 IST)

புளிச்சகீரையை வெறுப்பவரா...? இதன் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா...?

Pulicha Keerai
ஆந்திராவில் புளிச்சகீரையை ‘கோங்குரா’ என அழைக்கிறார்கள். புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் உண்டு.


புளிச்சக்கீரை உடல் சூட்டைக் தனித்து உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்ச கீரை விளங்குகிறது.

புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.

காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.

பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது. நீர் கோர்த்தல் பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

புளிச்சகீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். புளிச்சகீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது. புளிச்சகீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். புளிச்சகீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.