செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் மருத்துவ பயன்கள் நிறைந்த கறிவேப்பிலை !!

தேநீர் தயாரிக்கும்போது அதில் ஒன்றிரண்டு கறிவேப்பிலை, இஞ்சி, ஏலக்காய் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் குடிக்க, சுவையும் வாசனையும்  தூக்கலாக இருக்கும்.

கறிவேப்பிலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் முகப்பரு குறையும். கறிவேப்பிலையை மென்று விழுங்கினால் வாய்ப்புண் ஆறும்.
 
கறிவேப்பிலையுடன் சிறிது சீரகம், வெந்தயம் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் இந்தக் கலவையைக் கலந்து குடித்து  வந்தால் பித்தச்சூடு மற்றும் கருப்பைச் சூடு நிவர்த்தி ஆகும்.
 
100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாறெடுத்து, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் போகும் வரைக் காய்ச்சி, தினசரி  தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.
 
தினமும் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலை இலைகளை மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறையும்.
 
இரும்புச்சத்தும் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ள கறிவேப்பிலை ரத்தசோகையைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
 
கறிவேப்பிலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் முகப்பரு குறையும்.