சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் சீரக தண்ணீர் !!
வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், நீர்கட்டு, நீர்சுருக்கு போன்றவற்றிற்கு சீரக தண்ணீரை அருந்த, விரைவில் நிவாரணம் உண்டாகும்.
சீரகம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இயல்புடையது. ரத்த அழுத்த நோயாளிகள் தினம் ஒரு தேக்கரண்டி சீரகம் சாப்பிட, ரத்த அழுத்தம் சீராகும்.
பிரசவித்த பெண்களுக்கு இது மிக சிறந்த மருந்தாகிறது. சீரகத்தை வறுக்கும் பொழுது நறுமண எண்ணெய் வெளிவரும். அப்பொழுது நீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த நீரை பருகும் பொழுது சீரகத்தின் பலன் அதிகரிக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
குழந்தை பெற்ற பெண்கள், இந்த சீரக நீரை பருக தாய்ப்பால் பெருகும். கருப்பை பலப்படும். குழந்தை பெற்றதால் கருப்பையில் உண்டான அழற்சி நீங்கும்.