1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் கொத்தமல்லி !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், கொத்தமல்லிக்கு இணை அதுவே. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் முக்கியமானது. எனவே சிந்தித்து செயல்படுங்கள்.

வாய் புண், வாய்துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு இன்றியமையாத பொருள் என்றால் அது கொத்தமல்லி தான். கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால், அது செரிமான பிரச்சனைகளையும் சரி செய்துவிடும்.
 
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளுக்கும் கொத்தமல்லி நல்ல பயனைத் தரும். இந்த கொத்தமல்லியை சாப்பிட்டால், ரத்த சோகை போன்ற நோய்களும் நம்மை நெருங்காது.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு அர்ப்புதமான மருந்து இந்த கொத்தமல்லி. உடலில் உள்ள சர்க்கரையை சமஅளவில் வைக்க இந்த கொத்தமல்லி மிகவும் உதவும்.
 
வயிற்றை சுத்தப்படுத்தவும் கொத்தமல்லி சாறைக் குடிப்பதுண்டு. வயிற்றில் உருவாகும் புற்றுநோயை ஆரம்ப நிலையில் அழிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
 
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
 
கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும்  இதில் இருக்கிறது.
 
கொத்தமல்லி ரத்தம் சுத்தமடைய உதவும். புதிய ரத்தம் உண்டாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல்  இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.