வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சிறுநீரகத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்யும் கொத்தமல்லி !!

நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதில் சிறுநீரகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக நச்சுக்களை போக்க இயற்கை வழிகள் நமக்கு தேவைப்படுகின்றன. 

கொத்தமல்லி தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை நீக்கி சிறுநீரக நோய்களை களைகிறது. கொத்தமல்லி மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும்.  கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. 
 
சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வருவதற்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு என்கின்றனர். கழிவுகள் சரியாக அகற்றப்படாமல் உடலிலேயே தங்கி  விடுகின்றன. இதனால் சிறுநீர், நீர் தக்கவைத்தல், பசியின்மை, சோர்வு, அரிப்பு, தசை பிடிப்புகள் மற்றும் கருமையான சருமம் போன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
 
சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனையும் களைகிறது, வயிற்றுப் போக்கு ஏற்பட காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது. கல்லீரல்  செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது இப்படி பல நன்மைகள் உள்ளது.
 
கொத்தமல்லி தண்ணீர் தயாரிப்பு:
 
ஒரு கொத்தமல்லி கட்டை எடுத்து நன்றாக அதன் இலைகளை அலசி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி சுத்தமான  தண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு ஆற விடுங்கள். 
 
பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி அதில் லெமன் ஜூஸை பிழிந்து ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வாருங்கள். இந்த கொத்தமல்லி தண்ணீரே சிறுநீரக பிரச்சனைகளை பெருமளவில் குறைத்து விடும்.