செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் !!

தேங்காய் எண்ணெய்யில் வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் தன்மையானது நிறைந்துள்ளது.

தேங்காய் எண்ணெய்யில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் அவை உடலுக்கு மிகவும் அவசியமானவையாக இருப்பதோடு, இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் அடங்கியிருப்பதால், இதனை உணவில் சேர்த்து பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
 
பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை போக்கவும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், தேங்காய் எண்ணெய்யில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் பற்களை துலக்கி வந்தால், பற்கள் வெண்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 
தேங்காய் எண்ணெய்யானது சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கும் நல்ல தீர்வைத் தரும். மேலும் பல்வேறு பொருட்களுக்கு சிறந்த மாற்றாகவும் விளங்கும். 
 
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வந்தால், இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன்  வைக்கலாம்.
 
சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க, தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால், சரும சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன்  இருக்கும்.