சிறுதானியங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது.
கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இவை அனைத்தும் அதிக ஆற்றலை தரக்கூடியவை. இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.
“சிறுதானியங்கள்”. வைட்டமின் “பி” நமது உடலின் இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைவதன் மூலம் கொழுப்புகளை தடுக்கப்படுகிறது.
கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுப்பதோடு. ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கும். நுண்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் இவற்றுக்கு உண்டு.
கைகுத்தல் முறையில் இடித்து, சலித்து, தண்ணீரில் கழுவி சாதம், பொங்கல் செய்து சாப்பிடலாம். இவற்றுடன் பயறு வகைகளையும் கலந்து சமைத்தால், கூடுதல் சத்துக்களைப் பெறமுடியும். இப்படி பலவிதமாக சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். இவை அதிக ஆற்றலை தரக்குடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.
பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
சிறுதானியங்களில் மெக்னீசியம் காணப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. மேலும், இது ஆஸ்த்துமா மற்றும் ஒற்றை தலைவலி ஏற்படுவதை பெரிதும் குறைக்கப்படுகிறது.