வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

இந்த ஒவ்வாமை உணர்வு எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் பெரிதும் மறுபடுகிறது. 

ஒரே உணவு ஒருவருக்கு ஒத்துக் கொள்கின்ற போது மற்றவருக்கு உடன்படாது போகிறது. பால், குளுக்கோஸ், லேக்டோஸ் போன்ற பால் பொருட்கள் குழந்தகளுக்கு சிறந்த உனவாகின்ற போது சில குழந்தைகளுக்கு கரப்பான எனப்படும் அரிப்பு, தோலில் செம்மை நிறம் போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் தோலில்  நீர்வடியும் எக்ஸிமாவையும் உண்டு பண்ணலாம்.
 
ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப் படுவதும் உணர்குறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம் தான்.
 
உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் போது வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், இசிவு, வாயு பிரிதல், கண் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல், தற்காலிக செவிகேளாமை, செவியில் அரிப்பு, சீழ் வடிதல், மூக்கு, தும்மல், சளி, மூச்சடைப்பு. ஆகியவையாகும்.
 
இதில் சரும ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை என வகைகள் உண்டு. மருந்தோ அதன் சிதை மாற்றப் பொருளோ மருந்துடன் சேர்ந்துள்ள பிற பொருள்களோ துயர் இடத்தில் ஏற்படுத்தும் இடை வினையின் விளைவு மருந்து ஒவ்வாமை எனப்படும்.
 
வாழிகின்ற இடங்கள், பணி செய்கின்ற அறைகள் போன்றவற்றில் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதவைகள் எவை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பின்னர்  அவற்றைத் தனிமைப்படுத்தித் தவிர்ப்பதன் மூலம் ஒவ்வானைத் துயரை அறவே போக்கி விடலாம்.
 
ஆயிர்வேதம் ஒவ்வொரு பருவ காலத்தின் முடிவில், உடலில் சேர்ந்த நச்சுப்பொருட்களை நீக்கவேண்டும் என்கிறது. கப-பித்தங்களை சமனாக்கும் உணவுகளை  உட்கொள்ளவேண்டும். இதனால் உடலின் நாளங்கள் சுத்திகரிக்கப் பட்டுவிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தவிர பருவ கால மாற்றங்களால்  ஏற்படும் ஒவ்வாமை வராமல் தடுக்கலாம்.