திங்கள், 20 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள்...?

தினமும் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதன் மூலம் உடலில் கொழுப்பு சேராது. மேலும் பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க பெரிதும்  உதவுகிறது.

தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக இருப்பதனால் அதனை தொடர்ந்து குடிப்பதன் மூலம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் செரிமான பிரச்சனை குணமடையும்.
 
தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சிறுநீரக பிரச்சனை மற்றும் காய்ச்சல், சளி போன்றவற்றில் ஏற்படும் வைரஸ்களையும் அழிக்க தேங்காய் தண்ணீர் பெரிதும் பயன்படுகிறது.
 
தேங்காய் தண்ணீர் தொடர்ந்து குடிப்பதன் மூலம் உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியையும் அதிகரித்து தைராய்டு சுரப்பி சீராக செயல்பட பெரிதும் பயன்படுகிறது.
 
தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம். தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் நமது உடலில் உள்ள  டாக்சின்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. மேலும், சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அதனைக் கரைக்க பெரிதும் உதவுகிறது.
 
தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடிப்பதன் மூலம் உடல் வறட்சி நீங்கி நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். மேலும் கர்ப்ப காலத்தில் வரும் ஆரோக்கிய நோய்களைத் தடுக்க பெரிதும் பயன்படுகிறது.
 
ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு மறுநாள் ஏற்படும் தலைவலிக்கு தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் தலைவலி நீங்கும். ஆல்கஹால் உடல் நலத்திற்கு தீங்கு  விளைவிக்கக் கூடியது. எனவே, ஆல்கஹால் குடிப்பதைத் தவிர்க்கவும்.