ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (19:53 IST)

எண்ணற்ற மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ள கேரட் !!

கேரட்டில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. குழந்தைகளுக்கு தினமும் ஒரு சிறிய கேரட் சாப்பிட கொடுப்பது நல்லது.பெரியவர்களாக இருந்தால் வாரத்திற்கு மூன்று தடவையாவது கேரட் சாப்பிட வேண்டும்.


கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஷூட்டிங், சியோல் ஜான்ஸ் டீன் போன்ற மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன. இவை கண்பார்வையை சீராக்கும். குழந்தைகள் சிறு வயதிலேயே கண்ணாடி போடுவதிலிருந்து பாதுகாக்கும்.

கேரட்டில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. கேரட்டில் உள்ள பைட்டோ கெமிகல்ஸ், ஆண்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதயத்தை பாதுகாக்கிறது.

கேரட்டில் வைட்டமின் சி உடன் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கேரட்டை தவறாமல் சாப்பிடுவது கிருமிகளிலிருந்து உங்கள் உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்பது சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்து ஆகும், இது உடலுக்குள் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது தோல் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது, அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.