கண்பார்வை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கேரட் !!
கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் கண் பார்வை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோய் குணமாகும்.
வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. இதிலிருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தருகிறது.
கேரட்டுடன் ஏலக்காயை போடி செய்து பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும்.
கேரட்டை எலுமிச்சை சாற்றுடன் பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள் தினமும் கேரட் சாப்பிட வேண்டும். கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாகவும் திடனாகவும் வைக்கிறது. உடல் எடையை குறைத்து மெலிவான தோற்றத்தை தருகிறது.