செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் !!

தினமும் உணவு சாப்பிட்டுமுடித்தவுடன் ஒன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய், ஈறுகள் மற்றும் பற்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமநிலையின்மை, வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அணைத்து பிரச்சனைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடித்து, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
 
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
 
உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும் நபர்களுக்கு, அவர்களின் ரத்த குழாய்களில் ரத்தம் கட்டி கொண்டு ரத்த ஓட்டம் சரிவர நடைபெறாமல் இதய பாதிப்பு, உடலின் பாகங்கள் செயலிழப்பது போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு ஏலக்காய்களை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
 
அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
புகை பழக்கத்தை நிறுத்திய நபர்கள் பலருக்கும் மீண்டும் மீண்டும் புகை பிடிக்க தூண்டும் உணர்வு ஏற்படும். அச்சமயங்களில் சிறிதளவு ஏலக்காய்களை முழுதாகவோ அல்லது பொடித்தோ வாயில் போட்டு மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
 
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.