திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (12:10 IST)

கறிவேப்பிலையை பயன்படுத்தி சர்க்கரையை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமா...?

கறிவேப்பிலையில் 'வைட்டமின் ஏ' சத்து நிரம்பியுள்ளது. இந்த 'வைட்டமின் ஏ' நமது கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்த மிகவும் உதவுகிறது. கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை மிகவும் நல்லது.


வலிமையான மற்றும் கருமையான முடியைப் பெறுவதற்கு கறிவேப்பிலை பயன்படுகிறது. மேலும் தலை முடியில் உள்ள பொடுகு உள்ளிட்ட  பல பிரச்சனைகளை நீக்கவும் கறிவேப்பிலை பயன்படுகிறது. இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதை தடுக்கும்.

தோல்களில் ஏற்படும் அலர்ஜிகள், நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த கறிவேப்பிலை பயன்படுகிறது. சருமத்தை ஆரோக்கியத்துடனும், பொலிவுடனும் வைத்துக் கொள்ள கறிவேப்பிலை மிகவும் உதவுகிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள கறிவேப்பிலை பயன்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை காட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலை மிகச்சிறந்த ஓர் இயற்கை மருந்தாகும்.

இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் கருவேப்பிலையை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஏனெனில் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கறிவேப்பிலையில் உள்ள ஃபோலிக் அமிலம் நமது உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்த மிகவும் உதவுகிறது.

மன அழுத்தத்தினால் உடலில் ஏற்படும் சில நோய்களில் இருந்து விடுபடுவதற்கு கறிவேப்பிலையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.