திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (17:11 IST)

அன்னாசிப் பூவை பயன்படுத்தி பல வியாதிகளுக்கு மருந்து செய்ய முடியுமா...?

Star anise
அன்னாசிப் பூவை பயன்படுத்தி பல வியாதிகளுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.


மாதவிலக்கை சரிசெய்யக்கூடிய மருந்து தயாரிக்கும் முறை: அதற்கு தேவையான பொருட்கள் - அன்னாசிப்பூ, பெருங்காயம், பனை வெல்லம். தயாரிக்கும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து அதில் சிறிதளவு பெருங்காயப்பொடி பனை வெல்லம் மற்றும் இளம் சூட்டில் வறுத்து எடுத்த அன்னாசிப் பூ பொடி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு சீரற்ற மாதவிலக்கு போன்ற பிரச்சினைகள் குணமாகும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சல் சளி உடல் வலியை போக்க கூடிய மருந்து ஆகும்.

அன்னாசிப்பூ இஞ்சி சீரகம் பனங்கற்கண்டு இம்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஸ்பூன் அளவு அண்ணாச்சி பூ பொடி சேர்க்க வேண்டும் அரை ஸ்பூன் அளவு நறுக்கிய இஞ்சி கால் ஸ்பூன் அளவு சீரகம் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்து ஆறியதும் அதை வடிகட்டி வைத்துக் கொண்டு காய்ச்சல் ஏற்படும் பொழுது மாலை வேளைகளில் குடித்து வந்தால் சளி உடல் வலி ஆகியவை விரைவில் குணமாகிவிடும் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் தொற்றுகளை நீக்கும் வயிறு உப்பசம் மருந்து தயாரிக்கும்.

அன்னாசிப்பூ சுக்குப்பொடி சீரகம் பனைவெல்லம் ஒரே அன்னாசிப் பூ பொடி 2 சிட்டிகை அளவு 1 சிட்டிகை அளவு கால் ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் பனைவெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து உணவுக்கு பின்பு மதிய வேளையில் சாப்பிட்டு வர வேண்டும் சாப்பிட்டு வந்தால் வயிறு உப்பசம் மாந்தம் ஆகியவை குணமாகிவிடும்.

அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகிறது. தசை பிடிப்பை சரிசெய்கிறது.