பல்வேறு நோய்களை தடுக்கும் சக்தி கொண்ட வால்மிளகு !!
உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தன்மை வால் மிளகு உண்டு. வால் மிளகை பொடி செய்து இளநீரில் கலந்து குடித்தால் வயிற்றில் ஏற்படும் சூடு பிரச்சினை சரிசெய்யும்.
வால்மிளகில் இருக்கும் வேதிப்பொருள்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோயை போக்கும் அருமருந்தாக வால்மிளகு செயல்படும்.
வயிற்று இருக்கும் புழுக்களை வெளியேற்ற சமயலில் வால் மிளகை சேர்த்து கொள்ள வேண்டும். சளி, இருமல் இருந்தால் வால் மிளகு,லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து பருக வேண்டும்.
வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும். தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, திண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும்.
வால் மிளகை தூள் செய்து சீரகம் சேர்த்து மோருடன் கலந்து குடிக்க வேண்டும். கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தன்மை வால் மிளகு உண்டு.
கல்லீரலை காயப்படுத்தும் வைரஸை வரவிடாமல் தடுக்கும். ஆன்டிஆக்சிடன்ட் தன்மை நிறைந்திருப்பதால் உடலின் பல்வேறு நோய்களை தடுப்பதில் வால்மிளகு சிறப்பாக செயல்படுகிறது.
வால் மிளகு பாலில் கலந்து குடித்தால் கப நோய் போன்ற பிரச்சினைகள் குணமாகும். வாதபித்தம், வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் குணப்படுத்தும்.