முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையுமா...?
முட்டைக்கோஸில் விட்டமின் கே மற்றும் சி ஆகியவை உடலில் இருக்கக்கூடிய கிருமிகளுக்கு எதிராக போராடும். அதனால் உடலில் ஏரளமான நன்மைகள் நிகழும் அவற்றில் ஒன்று புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடு படலாம்.
முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் நீங்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம்.மேலும் முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
முட்டைக்கோஸில் உள்ள சுண்ணாம்புச்சத்து சத்து எலும்பு, பற்களை உறுதிபடுத்துகின்றன. மேலும் எலும்புகள் எப்பொழுதும் வலுமையுடன் இருக்க பெரிதும் உதவுகின்றன. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
ஆரோக்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ வேண்டுமானால் கண்டிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். முட்டைகோஸ் சாற்றில் இருக்கக்கூடிய ஹிஸ்டின் என்ற சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும். மேலும் நரம்புகளுக்கு வலுகொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அல்சர் கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கும். இதிலிருந்து மீள உங்களுக்கு முட்டை கோஸ் தண்ணீர் உதவிடுகிறது. இதில் இருக்கும் கேபேஜென் அதாவது விட்டமின் சி இது வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக் கூடியது. மேலும் ஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.