திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (17:04 IST)

வறண்ட சருமத்துக்கு பொலிவை தரும் அழகு குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் !!

Dry Skin
சருமம் வறண்டுபோகாமல் இருக்க, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயாஜாலம் அதி அற்புதமானவை.


ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போய் சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.

தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும்.

வாழைப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவைகளை சேர்த்து அதில் அரை தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடர் சேர்த்து கிரீம் போல ஆக்கி முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.

ஓட்ஸ், பார்லி, சோயா மில்க் போன்றவைகளை சேர்த்து பேக் போடலாம். கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

பாலாடை, ஆப்பிள் இரண்டையும் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும். பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு ஆரோக்கியம் தரும்.