செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இதயத்தில் ஏற்படக்கூடிய ரத்த குழாய் அடைப்பை போக்கும் ப்ரோக்கோலி !!

வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் நல்லது.

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக  அமைகிறது. மேலும் தோல் சுருக்கம் ஏற்படாமல், தோல் ஈரப்பதத்துடன் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தொற்றத்தை உண்டாக்குகிறது.
 
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக இருப்பது ஆண்டி ஆக்சிடண்டுகள். இவற்றின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. ப்ராக்கோலியில் நம் சொன்ன ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து அதிகமாக இருக்கிறது. 
 
ப்ராக்கோலியை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடலில் இருக்கும் செல்களால் ஏற்படும் புற்றுநோய் போன்றவை ஏற்படுவது குறைவு.
 
வாரத்திற்கு இரண்டு முறையாவது ப்ராக்கோலி சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் எலும்பு மற்றும் பற்கள் வலுவடையும். மேலும் கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேறுவதையும் தடுக்கிறது.
 
ப்ராக்கோலியில் சல்பர் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளது. இதனால் வாரத்திற்கு இரண்டும் முறை சமைத்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும். உடல் தூய்மையாக இருக்கும்.
 
ப்ராக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதயத்தில் ரத்த குழாய்கள் அடைக்காமல் பாதுகாக்கிறது.
 
ப்ராக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது,மேலும் கண் மங்குதல்,  கண்புரை போன்றவற்றை நீக்குகிறது.