திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த அக்ரூட்...!

வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் "ஈ" சத்து நிறைந்துள்ளது. மேலும், புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க், கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு இதில் உள்ளது. 
அக்ரூட் மிக அதிக அளவு ஆண்டியாக்ஸிடென்ட் கொண்டுள்ளது. எலும்புகளை வலுப்படுத்தும். சருமம் பொலிவடையும். தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிரப்பப் பெற்றது மற்றும் இது நல்லா கொழுப்பின் உறபத்தியை அதிகரித்து அதை ஒரு இத்யத்தை நல்ல ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
 
அக்ரூட் ஒரு நல்ல ‘முடிஉணவு’ ஆகவும் உள்ளது. அது ஏனென்றால, அது முடியை நீளமாக்கவும், முடி உதிர்தலைக் குறைத்து முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் ஒரு அளவிற்கு உதவும்.
 
அக்ரூட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
 
அக்ரூட்டில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.
 
குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று அக்ரூட். மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்.
 
அக்ரூட் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது.