வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் அருந்தவேண்டும் தெரியுமா...!!

ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. கோடைக்காலம், கடுமையான உடற்பயிற்சி, வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் உண்டாகும் நீர்ச்சத்து இழப்பினால் நீரின் தேவை இன்னும் அதிகரிக்கலாம்.
உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இரத்த ஓட்டம் சீராகும். வீட்டைவிட்டு வெளியே செல்லும் போதும், வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்று நோய் தடுக்கப்படும்.
 
விடியற்காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.
 
குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்னதாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
மூன்று வேளையும் சாப்பிடுவற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ஜீரண சக்தியை அதிகமாக்கும்.
 
அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் நன்றாக  செரிமானம் ஆகும். மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
 
நீருக்கும் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சோடியம் அதிகமானால் தாகம் அதிகரிக்கும். சோடியம் குறைந்தால் சிறுநீரகம் அதிகமான சிறுநீரை வெளியேற்றும்.
 
தண்ணீர் அதிகமாக அருந்துவது ஆரோக்கியம் தான், ஆனால் தாகம் இல்லாமல் அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது கூடாது. உடல் உழைப்புக்கு ஏற்றவாறு தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமான சூட்டில் பருகுவது மிகவும் நல்லது.