1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:07 IST)

அன்றாட உணவில் நூக்கலை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

Nookal
நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவில் நன்மைகளை தரக்கூடியது. அன்றாட உணவில் நாம் காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.


நூக்கலை அடிக்கடி நம் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

நூக்கலில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இருக்கும். இந்த வகையான காய்கறிகளை உட்கொள்வதால் உடலின் உஷ்ண தன்மை குறையும்.

நூக்கலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது. நூக்கலை நம் அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் நம் உடலில் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் நூக்கலை தினமும் சாப்பிட்டுவந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பொதுவாக நூக்கல் குடல் நாளங்களை பலமடையச் செய்யும் மிகச்சிறந்த காய் ஆகும்.

நூக்கலில் நார்ச்சத்து மிகுந்து இருக்கும். நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் இயல்பாகவே செரிமான பிரச்சனையை சீராக்கும்.