புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:36 IST)

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பப்பாளி பழம் !!

Papaya
பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.


வைட்டமின் ஏ கார்னியாவைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் விழித்திரையின் சிதைவைக் குறைக்கிறது.

பப்பாளிப் பழத்தில் பாப்பைன் எனும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. பப்பாளி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இரண்டும் அதிக அளவில் உள்ளது  இவை இரண்டும் மலச் சிக்கலைத் தடுக்கவும் செரிமானப் பாதை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. பப்பாளி பழம் உண்பதால் பொட்டாசியம் அதிகரித்தை அதிகரித்து சோடியம் சத்தை குறைத்து இதய நோய்களை தடுக்கிறது.

வைட்டமின் கே இன் குறைபாடு எலும்புகளை பலவீனப் படுத்துகிறது. வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியம் ஆகும். ஏனெனில் இது கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது மற்றும் சிறுநீர் மூலம் கால்சியம் வெளியேறுவதை தடுக்கிறது. வலுவான எலும்புகளை பெற கால்சியம் அவசியம் ஆகும்.

பப்பாளி பழத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது தீக்காயங்கள் ​​குணமாவதை ஊக்குவிக்கவும் காயம் பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பப்பாளி கூந்தலுக்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ உள்ளது. தோல் மற்றும் முடி உட்பட அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ அவசியம்.

பப்பாளிப் பழத்தில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது இது சரும கட்டமைப்புக்கு ஆதாரனமான கொலாஜன் உற்பத்தி தேவை படுகிறது.