தோல் தொடர்பான நோய்களுக்கு சிறந்த புளிச்சகீரை !!
புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.
பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது.
புளிச்சக்கீரை உடல் சூட்டைக் தனித்து உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்ச கீரை விளங்குகிறது.
புளிச்சக்கீரையின் கனியில் இருந்து வரும் சாற்றை சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமாகிறது.
புளிச்ச கீரையின் விதைகள் பால் உணர்வுகளை தூண்டிவிடுகிறது. புளிச்ச கீரையினை உடல் வலியைப் போக்க மேல் பூச்சாக பயண்படுத்தலாம்.
புளிச்ச கீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 8. புளிச்ச கீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.