வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவில் அடிக்கடி மீன்களை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

மீன்களில் அதிகளவு புரோட்டீன் மற்றும் விட்டமின் டி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. சில ஆரோக்கியமான உணவுகளைத் தவறாமல்  எடுத்துகொள்ளும் போது இயற்கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோய் என்பது பெரும்பாலோரைத் தாக்கும் நோயாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் ஆரோக்கியமற்ற உணவுப்  பழக்கமும், வாழ்க்கை முறையும் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 
ஆய்வின்படி, நாம் உண்ணும் உணவில் மீன்களை அடிக்கடி சேர்த்துக் கொண்டேவந்தால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக  உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
மீன் உணவு வகைகளோடு மீன் எண்ணெய் சேர்த்து எடுத்துகொள்வதும் நல்லது. மீன் இயற்கையாகவே புற்று நோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மீன்  எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படும் ஒமெகா 3 என்னும் கொழுப்பு அமிலத்தை இயற்கையாக தருகிறது மத்திமீன்.
 
ஒமேகா - 3 பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் வெளிப்பாடு பெருங்குடல் புற்றுநோய் வீரியத்தை குறைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது. 
 
மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் உடலில்  தங்குவதும் குறைகிறது. மீன் உணவு வகைகளை வறுப்பதும், எண்ணெய்யில் பொரிப்பதையும் தவிர்த்து குழம்பாக செய்து சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும்  என்கிறார்கள் மருத்துவர்கள்.
 
அதிகம் தீங்கு விளைவிக்காத மீன் உணவு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தைப் பாதுகாக் கிறது. மன அழுத்தம் வராமல் காக்கிறது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்றும் இதைச் சொல்லலாம்.