எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாத கிரீன் டீயின் நன்மைகள்!!

கிரீன் டீயில் ஏராளமான வைட்டமின் பி, சி மற்றும் ஈ ஆகியவையும் உள்ளன. இவை செரிமானத்திற்கு முக்கியமானவை. ஒரு ஆய்வின்  அடிப்படையில், ஒரு நாளைக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட கப்கள் கிரீன் டீயைக் குடித்து வருவதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம்  33 சதவீதம் வரை குறைவதாக தெரிவிக்கின்றனர். 
கிரீன் டீயின் முக்கிய உட்பொருளான கஃபீன், உங்களை விழிப்புடன் வைத்திருக்க உதவுவதோடு உங்களை புத்திசாலியாகவும் மாற்ற  உதவுகிறது.
 
கிரீன் டீ, ஒருவருக்கு வயதாகும் போது, நியூரான்களைப் பாதுகாப்பதன் மூலம் மூளையைப் பாதுகாக்கிறது, இதனால் அல்சைமர்கள், பார்கின்ஸன்கள் மற்றும் பிற நியூரோடி ஜெனரேட்டிவ் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
 
கிரீன் டீ புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள், குறிப்பாக கேட்சின்கள் என்பவை, புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் கொண்டவை.
 
கிரீன் டீ குடிப்பதால் நுரையீரல், சருமம், விதைப்பை, மார்பகம், குடல், கல்லீரல் மற்றும் கணையம் போன்றவற்றில் ஏற்படக் கூடிய புற்றுநோய்களுக்கு எதிராகவும் அவற்றில் குணமடைவதற்கு உதவுவதிலும் அதிக செயல்திறன் கொண்டதாக இருப்பதாகக்  கண்டறியப்பட்டுள்ளது. 
 
கிரீன் டீ எலும்புகள், குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகமாக்குகின்றது. மேலும் கிரீன் டீயின் உட்பொருட்கள், ருமட்டாய்ட் ஆர்த்ரட்டீஸ் போன்ற நிலைமைகளை எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்கின்றது.
 
கிரீன் டீ, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை உண்பதைத் தடுக்கின்றன. மேலும் பற்சிதைவைத் தடுக்க உதவும்.


இதில் மேலும் படிக்கவும் :