திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 11 மே 2022 (12:14 IST)

நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Gooseberry
நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதில் உள்ள புளிப்புத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இதயத்திற்கு ரத்தம் உறைதல் அடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது. குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலரோசி ஸ் என்பன இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் தடுக்கிறது.


நெல்லிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வருபவர்கள் தோலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறும் ரத்த ஓட்டம் நன்கு தூண்டி தோலின் சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

இளமைத் தோற்றத்தை இதில் நிறைந்து இருக்கும் வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தில் இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்றுநோயில் இருந்து ஏற்படாமல் காக்கின்றது.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது  சாப்பிடலாம். நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவைக்கும்.

ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும்  பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக  உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.