1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

இலந்தை பழமானது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது. இலந்தை பழமானது நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் அதிகமாக சாப்பிடலாம். 

இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். இதில் புரதம், தாதுஉப்பு மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.  
 
இலந்தை பழம் நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி, உலர்த்தி, கொட்டை நீக்கி பொடி செய்து சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து, அரிசி கஞ்சியில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.
 
ஒரு தேக்கரண்டி பொடியை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து பருகினால் மன அமைதி, நல்ல தூக்கம் உண்டாகும். முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். இளமையான தோற்றம் கிடைக்கும்.
 
இலந்தை பழத்தின் விதையை நீக்கி விட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி வைத்து கொண்டு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் அதிக உதிர போக்கை தடுக்கவும் இலந்தை பழம் பயன்படுகிறது. இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும். பற்கள் உறுதி பெறும்.