1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் வருவது தடுக்கப்படும். இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும் திறன் உண்டு.

சப்போட்டா பழச்சாறுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் நாள்பட்ட சளி குணமாகும். சப்போடா பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு  மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும்.
 
இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். மேலும், இது பித்தத்தைப் போக்கும் வல்லமை கொண்டது. சப்போடா பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும்.
 
இரத்த ஓட்டத்தை விருத்தி செய்யவும், வயிற்று போக்கை தடுக்கக் கூடியதாகவும் சப்போட்டா திகழ்கிறது. சப்போட்டா பழம் சிறந்த நோய் தடுப்பு பொருளாக  செயல்படுவதுடன், கோடையில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து தாகத்தை தணிக்கிறது.
 
புற்று நோய்களை உருவாக்கக் கூடிய நச்சு கழிவுகளை நீக்கக் கூடியதாகவும் இது விளங்குகிறது. நோய் கிருமிகளை உடலில் அண்ட விடாமல் தடுக்கும் சக்தியும்  சப்போட்டா பழத்திற்கு உள்ளது.