1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் !!

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை இரத்தத்தில் கலப்பதை தடுக்கிறது. தோலுடன் கூடிய ஆப்பிளை சாப்பிடும் போது தான் இந்த பலன் கிடைக்கும். 

ஆப்பிள் பழச்சாறு என்பது நார்சத்து சக்கையாக வெளியேற்றப்பட்ட வெறும் ப்ரக்டோஸ் மட்டுமே உள்ளது என்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
 
ஆப்பிளில் இரும்புச்சத்து பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் பாலுடன் ஒரு ஆப்பிளும் எடுத்துக் கொண்டால் ரத்தசோகை நீக்கி உடலை பாதுகாக்கும். உடலைப் பாதுகாக்கும் பழங்களில் ஆப்பிள் முதலிடம் வகிக்கிறது. 
 
தினசரி ஒரு ஆப்பிள் உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என சமிபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் ஆப்பிளின் தோலில் உள்ள பாலிஃபீனால்கள் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்கு செல்கிறது.
 
ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் என்பது நன்மை தரும் விஷயம். மேலும் ஒரு சிறிய ஆப்பிள் ஒரு நாளைக்கு அதுவும் தோலுடன் கூடிய ஆப்பிளை சாப்பிடவும்.
 
தினம் இரண்டு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக கரைத்து விடுகிறது.
 
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ரத்தத்தில் வேகமாக கலந்து அதில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
 
ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் எனும் சத்து சுவாச செல்களை வலிமை ஆக்குகிறது. இதனால் நுரையீரலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீராக வைக்க முடிகிறது.