1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Benefits of Dry grapes !!

உலர் திராட்சையின் பயன்கள் !!

உலர் திராட்சை
உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது.


மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சையை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

உலர் திராட்சை இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும் போது எடை குறைப்புக்கும் உதவுகிறது. அவற்றை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

கருப்பு திராட்சையை இரவில் ஊறவைத்தால், சாப்பிட்டால் மலமிளக்கியாக செயல்படும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலையில் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.

மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொண்டால், அந்த நோயில் இருந்து விடுபடலாம்.

உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது. எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்க உலர் திராட்சைப் பயன்படுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் பூண்டு !!