திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட உணவில் கறிவேப்பிலையை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் !!

கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்கும்.

உணவில் தொடர்ந்து கறிவேப்பிலையை பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல், வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக  குறைகிறது.
 
உணவில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
 
கறிவேப்பிலையை சாப்பிடுவதாலும், கறிவேப்பிலை ஊறவைத்த தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தாலும் மேற்கண்ட தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
 
கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி  உண்டாகும்.
 
தினமும் கறிவேப்பிலைகளை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம். கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.