திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

திராட்சையை அதிகளவில் எடுத்து கொள்வதால் என்ன நன்மைகள்...?

திராட்சையை அதிகளவில் எடுத்துக் கொண்டால் இருத நோயை கட்டுப்படுத்தலாம். இதயத்தை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை திராட்சையில் உள்ளது. 


இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.
 
கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் கூட இப்பழத்தினை தினமும் எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட பல நோய்களிலிருந்து குணமடையலாம்.
 
உடல் வளர்ச்சி குறைந்தவர்கள், உடல் பலவீனமானவர்கள் திராட்சையை தினமும் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.
 
தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை கொண்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரம் குணமடையலாம்.
 
உலர்ந்த திராட்சையையும் நாம் பயன்படுத்தலாம். பல நூறு ஆண்டுகளாகவே இந்த உலர் திராட்சையானது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயணத்தின் போது இந்த உலர் திராட்சை சாப்பிட்டால் சோர்வு இல்லாமல் பயணம் செய்ய வழிவகை செய்யும். தேவையான  சக்தியும் அதிகளவில் கிடைக்கும்.
 
ரத்தக் கொதிப்பு நோய்க்கு அருமருந்தாக திராட்சை விதைகள் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு, ரத்தக் குழாய்களில் வீக்கம் ஆகியவற்றை  திராட்சை விதை குறைக்கும்.
 
மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை திராட்சை கட்டுப்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை திராட்சை கரைக்கும்.
 
தினமும் திராட்சையை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயாளின் காலில் ஏற்படும் மரத்துப்போகும் தன்மை தடுக்கிறது. கண்புரை வராமல் திராட்சை காக்கிறது. கருப்பு திராட்சை விதை சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யும். 
 
மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தரும். பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து திராட்சை காக்கிறது. திராட்சை தினமும் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.