1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்...!!

உடல் எடையைக் குறைக்க, உணவில் கருப்பு உப்பு மட்டுமே சேர்த்து சமைப்பது நன்மை தரும். ஏனென்றால், உடல் எடை குறைவதை கண் கூடாகப் பார்க்கலாம். மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்தாகவும் பயன்படுகிறது. சிறிது கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு, அத்துடன், இஞ்சி, எலுமிச்சை சாறினை சேர்த்துப் பருகினால், மலம் இளகி வெளிப்பட்டுவிடும்.
கெட்ட கொழுப்புத் தன்மையை மட்டுப்படுத்துகிறது. கருப்பு உப்பினை உணவில் சேர்த்துக் கொள்வதால், கொலாஸ்ட்ரல் அளவு அடிக்கடி வேறுபடாமல், ஆரோக்கியமான ஒரே நிலையில் பாதுகாக்கப் படுகிறது. சீரான ரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்கிறது. 
 
கருப்பு உப்பில், ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், அதற்கு அமிலத் தன்மையைக் கட்டுப் படுத்தும் தன்மை உண்டு. வயிற்றில் அமிலத்தன்மை  கூடுவதால் தான் நெஞ்செரிச்சல் உண்டாகிறது. கருப்பு உப்பைப் பயன்படுத்தினால் இந்த நெஞ்செரிச்சல் குறையும்.
 
கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், நல்ல கருமை நிறம் முடிக்கு கிடைப்பதோடு, வெடிப்பும் நின்று போகும்.
 
தினமும், தக்காளி ஜூஸில், கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். குளிக்கும் நீரில்  கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும். 
 
கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கருப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள்  மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும்.
 
கருப்பு உப்பில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் தென் இந்தியாவில் இதன் உபயோகம் மிகமிகக் குறைவு என்றே சொல்லலாம். ஏனென்றால்,  இந்த உப்பில் முட்டையின் மணம் இருப்பதால், சைவ விரும்பிகள் இந்த உப்பை உட்கொள்வதில்லை. மணம் மட்டுமல்ல, முட்டையின்  குணங்கள் அனைத்தும் இந்த உப்பிற்கு உண்டு. 
 
ஒரு தாமிரப் பாத்திரத்தில் சிறிது கருப்பு உப்பைப் போட்டு, மிதமான தீயில் வைக்கவும். உப்பு நிறம் மாறியவுடன், தீயிலிருந்து நீக்கி, அந்த  உப்பினை சிறிது எடுத்து, நீரில் கரைத்துக் குடித்தால், உணவு மேலே வருவது நிற்கும்.