செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ஏற்படும் நன்மைகள்...!

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் பழுத்த கொய்யாப்பழத்தில் 305 மில்லி கிராம் வைட்டமின் சி  நிறைந்துள்ளது.
கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வருவதால் பெண்களில் மார்பகப் புற்றுநோய் குணமாகும். சொறி, சிரங்கு போன்ற துன்பம் தரும் நோய்களை  விரட்ட கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
 
மலச்சிக்கலால் துன்பப்படுபவர் கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் அதிலிருந்து விடுபட இயலும். நீரிழிவு நோய் மற்றும் மூல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யாப் பழத்திற்கு உண்டு.
கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது.
 
முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புர்றுநோய் அபாயம் குறைவதாகக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக  அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.
 
கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு  மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.