இயற்கையான முறையில் முகத்தை பராமரிக்க உதவும் அழகு குறிப்புகள் !!
கீரீம்களை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். இது போலி தோற்றத்தை மட்டுமே உண்டாக்கும். கற்றாழையை முகத்தில் தடவிவிட்டு காயவிட்டு குளித்து வாருங்கள் முகம் பிரகாசமடையும்.
நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தினை ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக மசித்து பின் அதை முகத்தில் மற்றும் கை கால்களில் தடவி 30 நிமிடம் உலர விட்டு முகத்தை கழுவினால் போதும் முகம் டல்லடிக்கும்.
இரவில் உறங்கச்செல்லுமுன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வர உடல் அழகைப்பெற்று மிளிரும்.
முகத்தினை வசீகரமாக்க நமக்கு தேவையானது சந்தனக்கட்டைதான். சந்தனக்கட்டையை நன்றாக எலுமிச்சை சாறு விட்டு தேய்த்து எடுத்து முகத்தில் பூசி உலர வைத்து கழுவுங்கள். உங்கள் முகத்தை பார்க்க உங்களுக்கே ஆசையாக இருக்கும்.
பலருக்கு கருப்புதான் பிரச்சினை. வெள்ளரிக்காய், கஸ்தூரி மஞ்சள், வேப்பம்பூ இவற்றை வாங்கி வைத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து பொறுமையாக தினமும் உடலில் தேய்த்து தடவி உலர வைத்த பின் குளித்து விடுங்கள். இதே போன்று ஒரு மாத காலம் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் நிறத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.