1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

இயற்கையான முறையில் சருமத்தை அழகாக பராமரிக்க சில குறிப்புகள் !!

வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோலை சேர்த்து அரைக்கவும். இதனுடன் கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகத்திலுள்ள கருமை, மங்கு ஆகியவை போய் விடும்.

பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சையை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து, இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வாரம் 3 முறை செய்து பாடுங்கள். முகம் மிளிரும்.
 
தினமும் இரவில் சந்தனத்தை அரைத்து அதனுடன் கோதுமை தவிடு, துளசி சாறு கலந்து முகத்தில் போடுங்கள். காய்ந்ததும் கழுவ வேண்டும். இது முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சு மிருதுவாக வைக்கும். அதோடு, எரிச்சல், படை மற்றும்கரும்புள்ளிகளையும் நீக்க உதவுகின்றது.
 
ஆப்பிள் மசித்தது அரை ஸ்பூன், பால் அரை ஸ்பூன், பார்லி பவுடர் அரை ஸ்பூன் ஆப்பிளை மசித்து அரை ஸ்பூன் எடுத்து அதில் மேலே சொன்ன மற்றவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். முகச் சுருக்கங்கள் போய் சருமம் மின்னும்.
 
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும்  கழுவலாம். இதனால் முகம் பிரகாசமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.